டிரம்புடைய அமெரிக்க அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தையடுத்து, எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
தான் விலகிக் கொள்வதாக அமெரிக்க அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபுர்வமாக அதன் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைனிடம் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்கா விலகிக் கொண்டதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அந்நாட்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மில்லியன் கணக்காண நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தனது கோரிக்கையை நிறைவேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காததனால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.