சாதாரண தரம் 6 பாடங்களாக குறைக்கப்படும் – அனைவருக்கும் உயர்தரம் கற்கும் வாய்ப்பு

263 0

தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் உள்ள 9 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

மொனராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் முதல் சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் 9 பாடங்களிலும் நூன சித்தி பெற மாட்டார்கள் என்றும் அதனால் உயர்தர கல்வியை தொடர அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்காக 26 பாடங்கள் பாட திட்டங்களில் உள்வாங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment