எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மகிந்த அமரவீர இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எந்த தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.