அர்ஜூன் அலோசியஸிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று சத்தியக் கடிதத்தை வழங்க, தான் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சன் ராமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது அணியில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் எந்த ஒரு மோசடியையும் அல்லது ஊழலையும் செய்யவில்லை என சத்தியக் கடிதத்தை வழங்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் வழங்கினால் அதன் பின்னர், நானும் சத்தியக் கடிதத்தை வழங்க தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.