நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திலும் மொனராகல, யாழ்ப்பாணம், மன்னார், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புத்தளம் முதல் மன்னார் வரையும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையுமான கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை காணக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் இன்று (16) காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.