இலங்கையில் கடல் ஆய்வை மேற்கொள்ள வருகிறது நோர்வே கப்பல்

303 0

எதிர்வரும் 21ஆம் நாள் இலங்கை வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஆய்வுகளில் இலங்கை , மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை – நோர்வே இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மீன்களின் வளம் உள்ளிட்ட கடல் வளங்களின் தற்போதைய இருப்பு தொடர்பாக மதிப்பீடுகளைச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கடைசியாக, இலங்கையில் 1978- 1980 காலப்பகுதியில், இந்தக் கப்பல் கடல் வள ஆய்வை மேற்கொண்டிருந்தது.

இந்த ஆய்வை மேற்கொள்ளும் நோர்வே கப்பல், நோராட் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

Leave a comment