ரமழான் போதிக்கும் பாடங்களை பின்பற்றினால் பிரச்சினை தீரும்- ரணில்

253 0

மனிதாபிமானம் மற்றும் தாராள மனப்பான்மை போன்ற ரமழான் கற்றுத்தரும் பாடங்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றுவோமானால் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு முழு மனித சமுதாயமும் புதிய வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்ல முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் நீண்ட வாழ்த்துச் செய்தியில் இதனைக் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, புதிய பிறையைக் கண்டதன் பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் சமத்துவம் தொடர்பான பெறுமதிமிக்க பண்பை வெளிப்படுத்துகின்றது. புனித அல்குர்ஆன் உலகிற்கு இறக்கப்பட்டமை என்பது  இந்த ரமழான் மாதத்திலேயே நினைவு கூரப்படுகின்றது.

அந்த ஆன்மீக, சமூகம் சார்ந்த பெறுமானங்கள் உலகிற்கு ஒளியூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தி சகோதர முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் பெருநாளாக இந்நந்நாள் அமைய வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment