மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்வதே முதன்மையான நோக்கம் எனவும், இதற்கு அடிப்படையான புனித ரமழான் நோன்பை முடித்துக் கொண்டு கொண்டாடும் இந்த ஈகைத் திருநாள், சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றுக்கு வழியமைக்கட்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
வெறுமனே வேதம் என்ற எல்லையைக் கடந்து உன்னதமான மனிதத்துவத்துடன் உறவாடும் நேர்மையான நோக்கம் கொண்டு வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கும் உலகவாழ் முஸ்லிம்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி விடுத்துள்ள நீண்ட வாழ்த்துத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.