கனடாவில் கடலில் விழுந்து காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்று கிழமை இரவு ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடலில் விழுந்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் ஊகித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி இரவு 10 மணியளில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து நீரில் விழுந்து தனது நண்பர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தனது நண்பர் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.
காணாமல் போன 27 வயதுடைய பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞர் இலங்கையை சேர்ந்தவர் எனவும், அவர் IT துறையில் பணியாற்றுவதோடு DJ இசை துறையில் ஈடுபடுவதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
பொலிஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் பார்தீபனை தேடும் நடவடிக்கையில் ஈடுபபட்டிருந்தனர். எனினும் அவர் நீரில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பார்த்தீபன் காணாமல் போவதற்கு முன்னர் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். எனினும் அந்த வீடியோவில் அவர் தனது பாதுகாப்பிற்காக ஜெக்கட் அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.