20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மிகவும் நன்மை கிடைப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் பிரதமருக்கு ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், எனினும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானால் அவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
ஆனால் 20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமிக்க பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
20வது அரசியலமைப்பு திருத்தத்தின் படி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசாங்கத்தில் இருந்து 07 மாத காலம் குறைவடையும் என்றும் அவர் கூறினார்.