நாட்டுக்கு தேவையான 85 வீதமான மருந்துகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இரத்த தானத்தின் போது இரத்த பிளாஸ்மாவை நீக்கப்படுவதாகவும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பிளாஸ்மா பெரல்கள் வீசப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
வீசப்படுகின்ற பிளாஸ்மாக்கள் மூலம் மருந்து உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதன்படி இந்த நாட்டில் வீசப்படுகின்ற இரத்த பிளாஸ்மாக்கள் 2015ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாகவும், அதன்மூலம் அன்னிய செலாவணி ஈட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த வருட இறுதியாகும் போது இந்த நாட்டுக்கு தேவையான 85 வீதமான மருந்துகளை இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்து முடிப்பதற்கு 48 நிறுவனங்களுடன் தற்போது ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.