ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பையிட்டு சந்தோசப்படுகின்றேன்- சந்த்யா எக்னெலிகொட

363 0

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்குத் தீர்ப்பை முன்னிட்டு தான் சந்தோஷமடைவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொட தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கான தண்டனை அறிவிக்கும் நேற்றைய நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்டு விட்டு வெளியோறும் போது அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த தேரரினால் பாதிப்புக்குள்ளான பலர் உள்ளனர். அவர்கள் அனைவருக்காகவும் தான் நான் இந்த வழக்கில் முன்னிலை வகித்தேன். இந்த வழக்கு தொடர்பில் இறுதிவரை நான் சமாதானம் செய்து கொள்ள செல்லவில்லை.  நீதிமன்றத்தின் கௌவரத்தை நீதிபதி சிறப்பான முறையில் பேணியுள்ளார் எனவும் சந்தியா எக்னெலிகொட மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment