நீலகிரியில் ரூ.10 கோடியில் புதிய பூங்கா – எடப்பாடி பழனிசாமி தகவல்

313 0

நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ‘இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி’ எனும் புதிய பூங்கா ஒன்று ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-

‘மலைகளின் ராணி’ என அழைக்கப்படும் உதகமண்டலம், 200 ஆண்டு காலம் பழமை வாய்ந்ததுடன், பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது செயல்பட்டு வரும் தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில், நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ‘இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி’ எனும் புதிய பூங்கா ஒன்று ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், வருடந்தோறும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரசு ரோஜா பூங்காவிற்கு வருகை புரிவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனம் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, நீலகிரி நகரத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் ரூ.3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ஆக மொத்தம் ரூ.127 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் இன்று நான் அறிவித்துள்ள இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment