எமது இனத்தைத் தெற்குப் பேரினவாதிகள் அழிக்கின்றார்கள் என்று கூக்குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் மதுபாவனை ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விடயங்களில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. அவர்கள் இந்த விடயங்களில் தாங்கள் முன்னுதாரணமாக இல்லாமல் இருப்பதால், இதில் தயக்கம் காட்டுகின்றார்களோ தெரியவில்லை. அரசியலில் முன்னால் வருகின்றவர்கள், முன்னுதாரணமாக இருப்பதற்குத் தகுதி உடையவர்களாக இருக்கவேண்டும். நானும் பாடசாலைக் காலத்தில் மதுபாவனைக்குப்பழக்கப்பட்டவன்தான். 30 ஆண்டுகளுக்கு முன்னர், மதுபாவனையைக்கைவிடுகின்றேன் என்று தீர்மானித்தேன். அதன்படி செயற்படுகின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பருதித்துறை நகரப் பகுதியில் “வன்முறையைத் தவிர்ப்போம் போதையை ஒழிப்போம்” என்ற விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் உரை யாற்றுகையிலேயே மேற்கண் டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
போதையில் நடமாடும் ஒருவரைக்காணொலி எடுத்து மாணவர்களுக்குக் காட்டுங்கள். இவரைப் போன்றுதான் நீங்களும் திரியப்போகின்றீர்களா என்று கேளுங்கள். மாணவர்களிடத்தில் மதுபாவனைக்கு எதிரான விழிப்புணர்வை இப்படியும் ஏற்படுத்தலாம். வடக்கில் ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனை தொடர்பில் அங்குள்ள அரசியல்வாதிகள் பேசுவதில்லை என்று உயர் கல்வி அமைச்சர் விஜயதாச தெரிவித்திருந்தார்.
நாங்கள் இதைப் பற்றி பேசுகின்றோம். உயர் கல்வி அமைச்சர் சொல்னும் குற்றச்சாட்டுச் சரியானது. ஏனெனில் தமது மதுபாவனையைப் பற்றி ஏனையோர் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில், இதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கக் கூடும்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் இங்கு வந்து பார்த்து விட்டுச் சிரித்து விட்டுச் செல்கின்றார் களோ தெரியவில்லை . இவர் கள் கத்தட்டும். நாங்கள் செய்வ தைச் செய்வோம் என்று நினைக்கின்றார்களோ தெரிய வில்லை. அதனால்தான் சில விடயங்களைச் செய்யுமாறு யோசனைகளை முன்வைத் துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு கிராமத்திலும் விழிப் புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். உள்ளூராட்சி மன் றத்துக்கு வட்டார ரீதியில் ஒவ் வொரு பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் வட்டார ரீதி யில் விழிப்புக் குழுக்களை அமைக்கவேண்டும். வட்டாரப் பிரதிநிதி அதற்குப் பொறுப்பேற் றால் வேலை இலகுவாகிவிடும். அந்தப் பிரதேசத்துக்கு வருகின்ற வாள்வெட்டுக் குழுக்களை பிடிக்கலாம். இரண்டுபெங்களில்வாள் வெட்டுக் குழுக்களை மடக்கிப் பிடித்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம். இனிமேலும் பேசிக்கொண் டிருக்காமல் செயலில் இறங்க வேண்டும் – என்றார்.