நெடுந்­தீவு உப ­த­வி­சா­ளர் தெரிவு ஒத்­தி­வைப்பு

222 0

நெடுந்­தீவு பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் 8 பேர் கலந்­து­கொள்­ளா­த­தால் உப­த­வி­சா­ளர் தெரிவு நேற்று நடத்­தப்­ப­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

நெடுந்­தீவு பிர­தேச சபைக்­காக உப தவி­சா­ளர் பதவி வெற்­றி­டத்­துக்கு வடக்கு மாகாண உள்­ளு­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் மீண்­டும் தெரிவு நடக்க இருந்­தது.

ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர்­கள் ஆறு உறுப்­பி­னர்­க­ளும், சுயேச்­சைக் குழு உறுப்­பி­னர்­கள் இரு­வ­ரும் சமூ­க­ம­ளிக்­கா­மை­யால் தெரிவு நடக்­க­வில்லை.

உள்­ளு­ராட்சி சபை தேர்­த­லின் பின்­னர் வடக்­கில் பல சபை­கள் தொங்கு நிலை­யில் காணப்­பட்ட போது பலத்த போட்­டி­க­ளுக்கு மத்­தி­யில் அர­சி­யல் கட்­சி­கள் நிர்­வா­கத்தை கைப்­பற்­றி­யி­ருந்­தன.

நெடுந்­தீவு பிர­தேச சபைக்­கான தவி­சா­ளர்,உப தவி­சா­ளர் தெரி­வில் பலத்த போட்­டிக்கு மத்­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது.

 உப தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்ட சண்­மு­கம் லோகேஸ்­வ­ரன் கால­மான நிலை­யில் சபை­யின் உப தவி­சா­ளர் பதவி வெற்­றி­ட­மா­க­வுள்­ளது.

Leave a comment