இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது என்று அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.
அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சைவ சமயிகள் அணிதிரண்டு வருகைதந்து தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.