சட்டவிரோதமாக கொண்டுவந்த தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

266 0

கட்டாரிலிருந்து சட்டவிரோதமாக 5 தங்க பிஸ்கட்களை கொண்டுவந்த வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்கள் 291.55 கிராம் நிறையுடைய அதேவேளை, அவற்றின் பெறுமதி 17 இலட்சத்து 49,300 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தங்க பிஸ்கட்டுகளை அரசுடைமையாக்கியுள்ளதுடன் சந்தேக நபருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment