உலகப் புகழ்பெற்ற, ஸ்பெயின் நாட்டு ஓவியரான பாப்லோ பிக்காசோவின் ஓவியங்களில் ஒன்று, 427 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
லண்டனில் உள்ள, ஒரு ஏல விற்பனை மையத்தில், 1909ல் பிக்காசோ வரைந்த, ஆரம்பகால கூம்பு வடிவ ஓவியங்களில், ஒரு ஓவியம், சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதுவரை நடந்த ஏல விற்பனையில், மிக அதிக தொகையாக, 427 கோடி ரூபாய்க்கு இந்த ஓவியம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, 134 கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளதாக, ஏல விற்பனை மைய நிர்வாகி கூறியுள்ளார். ஓவியத்தின் முந்தைய உரிமையாளர், 1973ல் நடந்த ஏல விற்பனையில், மூன்று கோடி ரூபாய்க்கு, இதை வாங்கினார்.