திருத்தப்பட்ட வெற் வரி சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட மூலம் முன்வைக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியல் யாப்புக்கு எதிராக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படாமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த சட்ட மூலத்துக்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுதந்திர கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் உள்ளடக்கியதாக புதிய வெட் வரி திருத்தச் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.