தாக்குதலுக்கு உள்ளான மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் காவற்துறை மா அதிபர் காலிட் அபு பக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்கு விஜயம் செய்திருந்த சமயத்தில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன்போது கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, இரண்டு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர்ஸ்தானிகருக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய காவற்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் நான்கு பேர் தேடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.