இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கடன் அட்டைக்கு பேர்ப்பச்சுவல் டிரெசரீஸ் நிறுவனம் 32 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் டிரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரைத் தொடர்ந்தும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.