ஒரு கோடியே 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்கக் கட்டிகளை கொண்டுவர முயற்சித்த இரு பெண்களை விமான நிலைய சுங்க பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து வந்த இலங்கை இசைக்குழுவொன்றின் உறுப்பினர் ஒருவரும் மற்றும் ஒப்பனை கலைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது கையடக்க தொலைபேசியின் பவர் பேங்க் (Power Bank) இல் மறைத்து வைத்து சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய தங்க கட்டிகளை கொண்டுவர முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.