அணுகுண்டு தயாரிக்க தீவிர முயற்சி – ஈரானை இஸ்ரேல் தாக்குமா?

344 0

அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு நாடுகளில் ஒன்றான ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானுக்கு நெருக்கடி கொடுத்தன.

இதையடுத்து ஈரான் சற்று இறங்கி வந்தது. இது சம்பந்தமாக ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் முறித்து கொண்டன.

இதைத்தொடர்ந்து ஈரான் அணு செறிவூட்டல் திட்டத்தை தீவிரமாக்கி உள்ளது. இதன் மூலம் அணு குண்டுகளை ஈரானால் தயாரிக்க முடியும்.ஈரானை பொறுத்தவரை அதன் முக்கிய எதிரி நாடாக இஸ்ரேல் உள்ளது. அந்த அணுகுண்டுகளை இஸ்ரேலுக்கு எதிராகத்தான் ஈரான் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய இஸ்ரேல் முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஏற்கனவே சதாம் உசேன் அதிபராக இருந்த காலத்தில் ஈராக் நாடு அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால் தங்களுக்குதான் ஆபத்து என கருதிய இஸ்ரேல் ரகசியமாக போர் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலைகளை முற்றிலும் தகர்த்தது.

அதேபோல் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியையும் முறியடிக்க இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறும் போது, ஈரான் தயாரிக்க திட்டமிட்டுள்ள அணுகுண்டுகள் எங்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நாங்களும் உரிய பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொள்வோம் என்று கூறி உள்ளார்.

ஒரு வேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பெரும் போராக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Leave a comment