ஹானர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாய் சப்-பிரான்டு நிறுவனமான ஹானர் தனது க்ளியர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
ஹானர் க்ளியர் ஹெட்போன் உலகில் முதல்முறையாக ரியல்-டைம் இதயத்துடிப்பு டிட்டெக்ஷன் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்களது இதயத்துடிப்பை டிராக் செய்து, உங்களை அமைதிப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability-HRV) அளவுகளை ஆய்வு செய்து, உடனடி பரிந்துரைகளை இந்த ஹெட்போன் வழங்கும்.
ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக் வசதியை ஹானர் க்ளியர் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ அனுபவமானது குறைந்த பிட்ரேட் கொண்ட ஆடியோக்களையும் அதிக துல்லியமாக, உயர் ரகத்தில் கேட்க வழி செய்யும். இதன் ரியல்-டைம் ஹார்ட் ரேட் டிட்டெக்ஷன் வலது புற இயர்பட்-இல் பொருத்தப்பட்டிருக்கும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மானிட்டர் மூலம் டிராக் செய்யப்படுகிறது.
ஹார்ட் ரேட் மானிட்டரிங் அம்சம் ஹூவாய், ஹானர் ஸ்மார்ட்போன்களை போன்றே ஹூவாய் ஹெல்த் ஆப் கொண்டிருக்கும் மற்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் என ஹானர் தெரிவித்துள்ளது. இந்த ஹெட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் சீனாவை சேர்ந்த அறிவியில் குழுமத்தின் உளவியல் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் பயனரின் உளவியல் சார்ந்து மன அழுத்தத்தை இயக்கி, அதற்கேற்ற ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் தகவல்களை வழங்கும். இதன் இயர்பட்கள் மிகவும் மென்மையாகவும், மனித தோல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலும், நீண்ட நேர பயன்பாடுகளிலும் சவுரகரியமாக இருக்கும் படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹானர் க்ளியர் ஹெட்போன்களின் இயர் ஃபின்கள் மற்றும் இயர்-டிப்கள் மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் MEMS மைக்ரோபோன், இன்-லைன் மியூசிக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.
வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் க்ளியர் ஹெட்போன் சீனாவில் 129 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,350) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சீனாவில் இன்று (ஜூன் 7) முதல் துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.