எல்லா வங்குரோத்து அரசியல் வாதிகளும் இறுதியில் இனவாதம், மதவாதம் தொடர்பில்தான் கருத்துத் தெரிவிப்பதாகவும், தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் கையாளும் ஒரு தந்திரோபாயம் இதுவாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (06) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
இதற்காக வேண்டி தான் அரசாங்கம் ஆரம்பத்திலேயே இனவாத தடைச்சட்டத்தை கொண்டுவந்தது. அதனைக் கொண்டுவர இடமளிக்க வில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கு முதலமைச்சரும், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் பயங்கரவாத கருத்துக்களை பேசி வருவதாகவும், இதனை அரசாங்கத்துக்கு தடுக்க முடியாதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்