ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் தமிழகத்திலிருந்து இன்று 90 அகதிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புகின்றனர்.
சுய விருப்பின்பேரிலேயே இவர்கள் அனைவரும் தாயகம் திரும்புகின்றனர். இதனடிப்படையில் திருச்சியிலிருந்து 20 குடும்பங்களைச் சேர்ந்த 54பேரும், சென்னையிலிருந்து 15 குடும்பங்களைச் சேர்ந்த 36பேரும் இன்று தாயகத்துக்குத் திரும்புகின்றனர். இவர்களில் 45 ஆண்களும் 45 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்றப்படுவர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு இலங்கையை வந்தடைவதற்கு இலவசமாக விமான பயணச்சீட்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.