கொழும்பின் பல பகுதிகளில் காணிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு நகரில் உயர் பெறுமதியான இடங்களாக தெஹிவளை, நாவல மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்கள் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
லங்கா பிரோபிரட்டி வெவ் என்ற இணையத்தளத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஆய்விற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேளை கொழும்பு மாவட்டத்திற்குள் ஒப்படும் போது குறைந்த காணி விலைகளை கொண்ட இடங்களாக இங்கிரிய, பாதுக்க மற்றும் கொஸ்கம ஆகிய பிரதேசங்கள் காணப்படுகின்றன.
இந்த ஆய்விற்கமைய தெஹிவளை, நாவல மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்களின் விலை அதிகாரித்துள்ளது. அதற்கமைய குறித்த பிரதேசங்களின் காணி ஒரு பெர்சஸின் விலை 3 முதல் 5 மில்லியன் ரூபாயாகியுள்ளது.
இரத்மலானை பொலஸ்கமுவ மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களில் ஒரு பெர்சஸ் காணி ஒரு மில்லியன் ரூபாவை கடந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்குள் காணி ஒரு பெர்சஸிற்காக பதிவாகியுள்ள குறைந்த விலை 50,000 முதல் 100,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ஒரு பேர்ச் காணி பல மில்லியன்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.