சுகாதார பாடத்தினை க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அதன்படி, இதனை 2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் கவனத்திற் கொண்டு, பாடசாலை பாடப்பரப்பு திருத்தங்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த யோசனையினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாடசாலை கல்வித்திட்டத்தில் ஆறாம் வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்பு வரையே சுகாதார பாடம் கட்டாய பாடமாக கற்பிக்கப்படுவதுடன், க.பொ.த. (சா/த) பரீட்சைக்காக அது கட்டாய பாடமாக கருதப்படுவதில்லை.