ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ் உத்தரவிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் கருக்குளிய ஜயதிலகாராம விகாரையில் வைத்து, அப்போதைய ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் செயலாளராக இருந்த தனசேன சுரசிங்க மீது தாக்குதல் நடத்தி கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோருக்கு எதிராக சிலாபம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடாத காரணத்தால் கைது செய்யப்பட்டு இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மே மாதம் 31ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜகத் சமந்த பெரேரா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.