இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேரூந்துகள் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற குறைப்பாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் 500 பேரூந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, நகர மக்கள் சேவைக்காக பயன்படுத்துவதற்காக 50-54 ஆசனங்களை கொண்ட 400 பேரூந்துகளையும், கிராமிய மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக 32-35 ஆசனங்களை கொண்ட 100 பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.