ஹக்கீமை இணைத்தால் நான் விலகுவேன் – அமைச்சரவை கூட்டத்தில் ரிஷாத்

276 0

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறித்து.

வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கடும் வாக்குவாதமாக இடம்பெற்றதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, இதன்போது வடக்கின் மீள்குடியேற்றத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் குழுவில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்தக் குழுவில் உள்வாங்கினால், தாம் அதிலிருந்து விலகுவதாக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரச்சினை சம்பந்தமாக அனைத்துக் கட்சிகளிலும் உள்ள முஸ்லிம் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment