பசிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணைக்கு

245 0

முன்னாள் பொருளாதார விவகார அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க தீர்மானித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 30 கோடி ரூபாய் பெறுமதியான கூரைத்தகடுகளை விநியோகித்த விவகாரம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் விசாரணை செய்யப்படவுள்ளது.

நவம்பர் மாதத்தில் மூன்று தினங்களில் இந்த வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை, வழக்கு தொடர்பான 4ம் மற்றும் 21ம் சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகியிருக்குமாறு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment