ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சியின் மத்திய மற்றும் செயற்குழுக்களின் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாளை (07) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பிலும் கலந்துரையாட உத்தேசிக்கப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும், கட்சியின் மத்திய செயற்குழுவில் உள்ளடக்கப்படுவரென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இதற்கமைய, அநுராத ஜயரத்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, பஸ்நாயக்க, கே.காதர் மஸ்தான் ஆகியோரும், அண்மையில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட வீரகுமார திஸாநாயக்க மற்றும் சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோரும், மத்திய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.