சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

231 0

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று (06) இரவு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி களனி, பேலியகொடை, வத்தளை, மஹர, தொம்பே, ஜா-எல, சீதுவ மற்றும் கம்பஹா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a comment