பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்!

375 0
thumb_large_vat_tax-720x480பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு குறித்த சட்டமூலம் தற்போது நிதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல சந்தர்ப்பங்களில் பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலத்துக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, அதனை மீண்டும் தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இந்த புதிய பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்ட மூலத்தில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்கும் யோசனை அவ்வாறே செயற்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இன்று இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் பட்சத்தில், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.