கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
‘காலா’ படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பது மேலும் மேலும் வன்மத்தைக் கூட்டிக்கொண்டே போகும். இது பெரிய இழப்புதான். சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டபோதும் நாங்கள் இதே உணர்வில் தான் இருந்தோம். பொன்.ராதாகிருஷ்ணன் ‘காலா’ திரைப்படத்திற்கு குரல் கொடுக்கிறார்.
ஆனால் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு ஏன் இதேபோல் குரல் கொடுக்கவில்லை? அவர் நடுநிலையாகத் தானே பேசியிருக்கவேண்டும்? இப்பொழுது அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் மட்டும் எதிர்த்து குரல் கொடுப்பதா? இது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது; இது இந்த மண்ணிலிருந்து வெளிவரும் படம்! ‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா..? நாளை கமல் படத்திற்கோ? விஜய் படத்திற்கோ? என் படத்திற்கோ இடையூறு ஏற்பட்டாலும் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான்.இவ்வாறு சீமான் கூறினார்.