பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் ஜனாதிபதியின் செயலாளரினால் தனக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான கோப்புகள் கிடைத்ததன் பின்னர் அவற்றை சபையில் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று(04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றதாக கூறப்படும் 118 பேரின் பெயர் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை சபையில் அறிவிக்குமாறும் பாராளுமன்றத்திலுள்ள பல உறுப்பினர்களும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய இந்த அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.