கட்சியிலுள்ள பின்னாசன எம்.பிக்களுக்கு பதவியொன்றை வழங்கும் வகையில் ஒவ்வொரு அமைச்சுக்கும் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஒருவரை நியமிக்க இதுவரை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் முன்வைக்கப்படவில்லையெனவும், அவ்வாறு முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு செலவு ஏற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவு வழங்குவதில்லையெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.