தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய மாத்தறையில் இருந்து கொழும்பு வரை செல்ல அறவிடப்பட்ட 600 ரூபாய் கட்டணம் 460 ரூபாய் வரை குறைவடையும் என மாத்தறை போக்குவரத்து நிறுவன தலைவர் அருண ஹல்பகே தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க ஆகிய வீதிகள் இரண்டில், இரு வீதிகள் செயற்படுவதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட நேரிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு வீதிகள் ஊடாக தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து கொழும்பு – கோட்டை, மாத்தறை – மஹரகம, மாத்தறை – கடவத்தை மற்றும் மாத்தறை – கடுவெல ஆகிய வீதிகளில் பயணிக்கும் ஒரு பயணியிடம் 140 ரூபாய் வரி அறவிடப்படுகின்றது.
தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இந்த பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றது. இதனாலேயே இந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.