மனித எலும்புகளை மீட்கும் பணிகள் ஏழாது நாளாகவும் தொடர்கின்றது

285 0

மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு நடவடிக்கைகள் 7 ஆவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அகழல்வானது எச்சங்கள் தென்படும் திசையை நோக்கிய அகழ்வாகவே இடம்பெறுகிறது.

மன்னார் நகரில் சதொச விற்பனை நிலையம் ஒன்றுக்கான கட்டுமானப் பணி இடம்பெற்றவேளையில்  19.03.2018 முதல்  23.03.2018 வரை இவ் இடைப்பட்ட காலத்தில் இங்கு அகழ்வு செய்யப்பட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்ட மணலில் மனித எச்சங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த அகழ்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா முன்னிலையில் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் குறித்த பணி ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அகழ்வானது குழியின் மேற்கு திசையை நோக்கிய பகுதியில்  எச்சங்கள் தென்பட்டதால் குறித்த  திசையை நோக்கி பெக்கோ மூலம் மேல் மணல் அகற்றும் பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment