கொழும்பு, ரொஸ்மிட் பிளேஸில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 4:30 மணியளவில் இந்த தீ வித்து ஏற்பட்டுள்ளதுடன், தீயணைப்பு படை பிரிவினர் தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னொழுக்கு காரணமாகவே, இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதென, ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.