வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதுமாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கு ஒன்றின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை என்பதால் தீ வேகமாக பரவியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அழிவடைந்துள்ளதுடன் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வவுனியா நகர சபை தீ அணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.