சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது

365 0

67493சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்

பொரல பகுதியில் வைத்து சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்தே இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகளுக்குள் அதி கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,சிறைச்சாலைகளுக்கு வெளியே சிறைச்சாலை அதிகாரிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நிலைமையினை மாற்றுவதற்கும்,சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.