இலங்கையில் இந்திய அதிகாரியின் பயணப்பை திருட்டு

317 0

14-1theftஇலங்கை அணிக்கும்,அவுஸ்திரேலிய சுற்றுலா அணிக்கும் பல்லேகலையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியின் கணினி தரவு ஆலோசகராக கடமயாற்றிய இந்தியரான ஸ்ரீராம் என்பவரின் உடைமைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் தங்கியிருக்கும் ஓய்வு அறையிலே இவரது பயணப்பை காணப்பட்டதாகவும்,இதன்போதே இவரது பை திருடப்பட்டுள்ளதோடு,குறித்த பையில் பல பெறுமதியான பொருட்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் 6 மாதத்திற்கு மாத்திரம் கணனி தரவு ஆலோசகராக கடமயாற்ற ஸ்ரீராம் இலங்கை வந்திருந்ததாகவும்,குறித்த திருட்டு சம்பவத்தினை அடுத்து இவர் இலங்கயை விட்டு சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.