மாலைத்தீவின் வைத்தியபீட மாணவர்கள் இலங்கையில் வந்து தமது கல்வியை தொடர வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்நாட்டின் சுகாதார பணியாளர்களுக்கு இலங்கையில் பயிற்சிகள் வழங்கவும்,மாலைத்தீவிற்கு அவசரமதாக தேவைப்படும் மருந்துகளை இலங்கையில் இருந்து பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாலைத்தீவில் இரத்ததான மத்தியநிலையங்களை அமைப்பதற்கான ஆலாசனையை வழங்கவும் இலங்கை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகசுகாதார அமைப்பின் 69 மாநாடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற போது அதில் கலந்துக்கொள்ள வந்திருந்த மாலைத்தீவின் சுகாதார அமைச்சர் அப்துல்லா நாசீம் இப்ராஹிம் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜிதவுக்கும் இடையில் கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம், சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால ஆகியோர் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.