ஒரு வருடம் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி பிரியதர்ஷன ஹேரத்தை தொடர்ந்தும் இடைநிறுத்தி வைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வருடத்தின் பின்னர் பிரியதர்ஷன ஹேரத்தை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள பொலிஸ் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றது. இதன்படியே அவர் சேவையில் இணைந்துள்ளார். சேவையில் இணைந்து 20 நாட்களின் பின்னர் பொலிஸ் மா அதிபர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தடை உத்தரவுக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லையென பொலிஸ் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.