பசில் ராஜபக்ஷவின் ஊழல் வழக்கொன்று ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு

275 0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஊழல் வழக்கொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி விசாரணை செய்யப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரதேச சபைகளுக்கு GI இரும்புக் குழாய்களை விநியோகித்து அரசாங்கத்துக்கு 3 1/2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய விடயம் தொடர்பான வழக்கே இவ்வாறு விசாரணை செய்யப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி நிதிய முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment