வெற்றிடமாக இருக்கும் நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்திக பத்திரன அல்லது ஆனந்த குமாரசிறி ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும் இவர்களின் பெயர்கள் கட்சியின் தலைமையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இவர்களை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பிரதி சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி கேட்டுள்ளது.
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவின் பெயரை பரிந்துரைக்க கூட்டு எதிர்க்கட்சியும் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனிடையே பிரதி சபாநாயகர் பதவி தொடர்பாக நாளைய தினம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.