அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி கவிதை வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி வெளியான கவிதை வருமாறு:-
ஸ்லீப்பர் செல், பேட்டரி செல் என்றெல்லாம் ஊளையிட்டு ஊரை ஏய்த்த நரி ஒன்று இனியும் தனது செப்படி வித்தை சிம்மத்தின் குகைக்குள் செல்லாது என்பது சிந்தையில் உரைக்கவே…
வெள்ளந்தி சிரிப்புக்குள் விஷத்தை நிரப்பிய விரியன் பாம்பு…
இனி ஒரு நாளும் அம்மா கட்டிக்காத்த அவ்வை சண்முகச்சாலை அண்ணா தி.மு.க. ஆலையத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியாது என்பதை அறிந்து கொண்டு விஷப் பாம்புகளுக்கென தனிப்புற்று எழுப்பி குடி புகுந்திருக்கு…
இரு தலை முனியன் எனப்படும் மண்ணுளி பாம்புபோல் மறைந்திருந்து கொண்டு…
இரு இலை இயக்கத்தின் பெருமை கெடுத்த தறுதலை கூட்டத்திடம் இருந்து ஒருவழியாய் கழகம் தீட்டுக்கழித்து தெளிவு பெற்றுவிட…
டோக்கனை வைத்து வாக்குகளை வளைத்தது மாதிரி ஒன்றரைக் கோடித் தொண்டர்களை விலை பேசி விடலாம் என கனா கண்டதெல்லாம் ஒரு நாளும் கைகூடாது என்பது புத்திக்கு உரைக்கவே புதுக்கடை திறந்திருக்கு…
அந்த கடை திறப்பையும் லண்டன் ஓட்டல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்த கருணாநிதிக்கும்…
ஆர்.கே.நகரில் குக்கர் கொதிக்க எரிபொருளாய் உதவிய சூரியனுக்கும்…
நன்றி தெரிவிக்கும் விதமாக கருணாநிதி பிறந்த நாளிலேயே கடை திறப்பை நடத்தி இருக்கு…
எப்படியோ அழுக்கு அகன்றது கணக்கு கேட்டே பிறந்த இயக்கத்தை விட்டு இழுக்கு அகன்றது…
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.