வித்தியாசமான கல்வி கொள்கைளைக் கொண்ட நாடாக பின்லாந்து

354 0

page01.pmdபோட்டிகள்,பரீட்சைகள் போன்றவை இல்லாத கல்விக் கொள்கைகளைக் கொண்ட நாடாக பின்லாந்து நாடு விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியு பிரிட்டின்ஹி சென்ரல் கனெக்டிகட் என்ற பல்கலைக்கழகத்தின் பிரதானியான ஜோன் மில்லரினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் மூலமே இந்த எழுத்தறிவு வீதம் தொடர்பில் அறிய முடிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வித்தியாசமான கல்வி முறைகளைக் கொண்டுள்ளமையால் உலகில் எழுத்தறிவு அதிகம் கொண்ட நாடுகளுள் இது முன்னணியில் திகழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் கல்வி,நூலகம் போன்ற வசதிகள் அதிகம் காணப்படுவதாகவும்,இந்த நாட்டில் இருந்து வெளிவரும் தரமான பத்திரிகைகளை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆய்வின் மூலமே பின்லாந்து நாட்டின் கல்வி அறிவு தொடர்பில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பின்லாந்து நாட்டின் கல்வி கொள்கைகளில் காணப்படும் விசேட நடைமுறைகளின் காரணமாக ஏனைய நாடுகளை விட முதலிடத்தில் பின்லாந்து வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.